tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அஸ்ஸாம் மற்றும் பீகாரில் வெள் ளம் காரணமாக சுமார் 37 லட் சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள் ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரி ழந்தோரின் எண்ணிக்கை 122 பேராக உயர்ந்துள்ளது.

நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வரு கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரி யில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த தன் எதிரொலியாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

நாமக்கல்லில் முட்டை கொள் முதல் விலை 15 காசு சரிந்து ரூ.3.50-ஆக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கி ணைப்பாளர் சங்கம் தெரிவித்துள் ளது. சென்னையில் முட்டை ரூ.3.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ் டிரா ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

 தமிழகம் முழுவதும், இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் மாநிலத்தில் அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை நடை பெறும் என்று மாநிலத்தில் சில பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டி ருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 3-இல் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் வரும் செப்டம்பர்-அக்டோபரில் விளையாட்டுப் போட்டித் தொடர்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரயில்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிராஸ் தர்ஸி (73) வெள்ளியன்று காலமானார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும், காவிரி கரை யோரப்பகுதியில் உள்ள காடுகளில் பெய்யும் மழையாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 7200 கனஅடியாக அதிகரித்துள்ளது.