tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரவையில் தீர்மானம் இயற்றுக!

திமுக எம்எல்ஏக்கள் மனு

சென்னை,ஜன.2- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக எம்எல்ஏக்கள், சட்டமன்ற செய லாளர் சீனிவாசனை சந்தித்து மனு அளித்தனர். குடியுரிமை திருத்தத் சடடத்தை திரும்ப பெறக் கோரி தமிழக சட்டடப பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள் ளார். இது குறித்து அவர் தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசனுக்கு (ஜன.2)அன்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில் “சட்டமன்ற விதி 172-ன் படி சட்டமன்ற விதியை தளர்த்தி தனி தீர்மானம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். அதில் நாட்டு மக்களால் பெரி தும் எதிர்க்கப்படும் குடியுரிமை திருத்தத் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தீர்மா னம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அடங்கிய மனுவை  தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணி யன், பி.கே. சேகர்பாபு, ஆர்.டி.சேகர், அரவிந்த் ரமேஷ், மாதவரம் டி. சுதர்ச னம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனை சந்தித்து கொடுத்தனர். அப்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்,“நாட்டிற்கே முன்னுதா ரணமாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குடியுரிமை சட்டத்தை ரத்து  செய்ய வேண்டும் என முன்மொ ழிந்து, பாஜக உறுப்பினர் ஒருவர் நீங்க லாக மற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர். கேரளாவை தமிழகம் பின்பற்ற வேண்டுமென கோருகின்றோம். வருகிற 6 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையின் இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், நாட்டின் நலன் கருதி, மக்கள் ஒற்றுமைக்கு, முன்னுரிமை அளித்து, மதரீதியாக மக்களை பிளவுபடுத்து வதை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்கின்ற நல்ல செய்தியை எடுத்துக் காட்டும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொ ழிய வேண்டும். பிரதான எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிமொழிய வேண்டும். எதிர்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.


 

;