tamilnadu

img

ஊடகச் சிந்தனை பி.எம்.மனோஜ், பத்திரிகையாளர்

தினந்தோறும் செய்திகளை வெளியிடுவதில் இரண்டு வகை யான பிரச்சனைகளை ஊடகத் துறை எதிர்கொள்கிறது. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும், எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்பதுவரை அரசு இயந்திரம் ஊடகங்களுக்குக் கட்டளையிடுகிறது. அதாவது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, முக்கியத்துவமற்ற விசயங்களின் செய்திகளை ஊதிப்பெருக்குவது, மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை சாதாரண முறையில் வெளியிடுவது முதலான தவறான  வழிகளில் செயல்பட ஊடகங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மறுபக்கம், தானே முன்வந்து பொய்ச் செய்திகளை உற்பத்தி செய்வதும் பிரச்சாரம் செய்வதும் ஊடகவியலாளர்களே மேற்கொள்கிறார்கள். இந்த இரண்டு போக்குகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஒரு மாதம் 2019-டன் கடந்து போனது. ஜனநாயகத்தின், இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகள் தாக்கப்பட்டதுதான் நாட்டின் இன்றைய பெரும் பிரச்சனைகளிலேயே மிகப் பெரிய தாகும். இயல்பாகவே ஊடகங்களின் முக்கியச் செய்தி அதுவாகவே இருந்தது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் வேறு என்ன செய்வது? துரதிருஷ்டவசமாக அந்த  உண்மையைக் காண்பதில் இந்திய ஊடகங்களின் பார்வை மங்கியுள்ளது. மக்களுக்குத் தேவையானதைக் கண்டு கொள்ளாமல் விடுவது, மக்களுக்கு தேவையில்லாததை அவர்கள் மீது திணிப்பது போன்ற வேலைகளைச் செய்வதுதான் ஊடகத் தர்மம் என்ற பரிதாப நிலையை இந்திய ஊடகத் துறை சந்திக்கிறது.  கடந்த பொதுத்தேர்தலில் நாடு விவாதிக்க வேண்டியிருந்த மிக முக்கியமான விசயங்கள் ரூபாய் மதிப்பிழப்பு, அறிவியலுக்குப் புறம்பாக ஜிஎஸ்டி-யைத் திணித்தது ஆகிய பொருளாதார விசயத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கும் எதிரான தாக்குதலாக இருந்தது. அணுகுண்டு போல இந்திய பொருளாதாரத்தின் மீது விழுந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அண்மை எதிர்காலத்தில் கரையேற முடியாத நாசத்தில் வீழ்ந்தது. கறுப்புப் பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதம் முதலானவற்றைத் துடைத்தெறிவோம் எனக்கூறிக் கொண்டு நடைமுறைப்படுத்திய தீர்மானம் அந்த மூன்று ’எதிரிகளையும்’ கடுகளவுகூடப் பாதிக்கவில்லை. ஜனநாயகத்தில் தீர்மானிக்கத்தக்க முடிவுவெடுக்க வேண்டிய மக்கள் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து உரிய முக்கியத்துவத்துடன் விவாதிக்கவில்லை. அதற்கான வாய்ப்பை ஊடகங்கள் வழங்கவு மில்லை. செய்திகளைப் பகிர்ந்து தருவது என்பதுதான் ஊடகங்களின் கடமை. அதை அவை நிறைவேற்ற வில்லை. 

உலகின் பெரும் ஊடகச் சந்தைகளில் முன்வரிசையில் இருப்பது இந்தியாவின் ஊடகச்சந்தைதான். பதிவு செய்யப்பட்ட 17ஆயிரத்திற்கு மேற்பட்ட நாளிதழ்களும், 400-க்கும் மேற்பட்ட முழுமையான செய்திச் சேனல்களும் உள்ள இந்திய ஊடகத்துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதை முதலில் அடையாளம் காண்பது கார்ப்பரேட்டுகள்தான். உலக ஊடக பீமன் ரூபர்ட் மர்டோக் கேரளத்திற்கு வந்து இங்குள்ள ஏசியா நெட் தொலைக்காட்சியை விலைக்கு வாங்குவதற்கு காட்டிய ஆர்வத்தையும், டைம்ஸ் ஆஃப் இண்டியா குரூப் மாத்ரூபூமியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது உண்டான விவாதங்களையும் நாம் மறக்கவில்லை. 2014-ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு நாட்டில் பிரபல கார்ப்பரேட் அடுத்து அடுத்து 17 ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்கியது. கார்ப்பரேட்டுகளும் ஆட்சித் தலைமையும் மிக நெருக்கமான உறவில் உள்ளனர். அதன் ஊடகத்துறையின் பணியானது கார்ப்பரேட்டுகளுக்காகவும் அதன் மூலம் அரசு இயந்திரத்திற்காகவும் செய்திகளை உருவாக்குவது என்பதாகும். அரசு இயந்திரத்தின் இயலாமைக்கு எதிரான குரலை ஒடுக்குவது என்பது அதன் மற்றொரு பகுதியாகும். 

சமீப நாட்களில் பார்த்தால் இந்திய ஊடகங்களின் தவறான வழக்கங்களில் சலிப்படைந்து வெளிவந்து லாபமோ நஷ்டமோ இல்லாத ஊடக நிறுவனங்கள் ஆரம்பிக்கின்ற காட்சி யும் உண்டு. அதே சமயத்தில் ரகசிய நிதிகள் மூலம் மண்ணில் முளைத்தெழுகிற பொய்ச் செய்திகளை அறுவடை செய்கின்ற செய்தி நிறுவனங்கள் இருப்பதையும் காண லாம். ஜனநாயக த்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை ஏற்படுத்தும் விஷப் பிரயோகம் ஊடகங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான், ஊடகங்களை நிரந்தரமாகக் கண்காணிக்கவும் விமர்சிக்கவும் செய்ய வேண்டியது முக்கியத்துவமாகிறது. வெளிவருகிற செய்திகள் சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை என்ற உறுதியான உணர்வுடன் வார்த்தைகளுக்கிடையில் தோன்றும் காட்சிகளையும் கடந்து உண்மையைக் கண்டறிவதற்கான ஆர்வம் சமூகத்தில் வளரவேண்டும். கடந்த நாட்களில் இந்து பத்திரிகையில் வந்த முக்கியச் செய்திகளில் ஒன்று ’கேரளத்தில் டிட்டன்ஷன் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’என்பதாக இருந்தது. நாடு முழுவதும் ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு அலையடிப்பதுடன், கேரள அரசும் மக்களும் அந்தப் போராட்டத்தில் பெருமைப்படத்தக்க வகையில் துணைநிற்பதுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களுக்கு எழுச்சியூட்டிய சூழலில்தான், கேரள அரசு மத்திய அரசின் தவறான வழியில் செல்கிறது என்ற தவறான எண்ணத்தை மக்களிடையே உருவாக்குகிற செய்தி பரப்பப்பட்டது. நிமிட வேகத்தில் சில மதவெறிக் கும்பல்களும் மார்க்சிஸ்ட் எதிரிகளும் அந்தப் பொய்ப்பிரச்சாரத்தை உண்மையென நம்பினார்கள். சில மணி நேரங்களில் அந்தப் பொய்ச் செய்தி அவர்களால் கொண்டாடப்பட்டது. முடிவில் முதலமைச்சர் அலுவலகம் விளக்கக் குறிப்பு வெளியிட்டது. அது பின்வருமாறு: ’மாநிலத்தில் டிட்டன்ஷன் சென்டர்களை’ நிறுவுவதற்கு அரசு திட்டமிடுகிறது என்ற பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானதாகும். இந்து நாளிதழில் ’state plans detention centre’ என்ற செய்தியில் குற்றம்சாட்டுவது போன்ற ஒரு தீர்மானத்தை மாநில அரசு பின்பற்றவில்லை. அது தொடர்பாக சில மையங்கள் செய்வது பொய்ப்பிர ச்சாரம் ஆகும்.

’ஏழு வருடங்களுக்கு முன்பு 2012 ஆகஸ்ட் மாதத்தில் டிட்ட ன்ஷன் சென்டர் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் மூலமாக அறிவித்தது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதோ, விஸா, பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக நாட்டில் தொடர்ந்து இருப்பதோ செய்கிற அன்னிய நாட்டினரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதுவரை கண்காணி ப்பில் வைத்திருக்க இத்தகைய சென்டர்கள் அமைக்கப்பட வேண்டு மென்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கான பரிந்துரையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம்.  இந்தக் கடிதத்தின் அடிப்படையில் 2015 நவம்பர் 4 ஆம் தேதி உள்துறை அமைச்சகக் கூட்டம் நடத்தப்பட்டது. அன்றைய டிஜிபி-யும் ஏ.டி.ஜி.பி இன்டலிஜென்ஸும், சிறைத்துறை ஐஜி- உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இது சம்பந்தமான எந்தவொரு ஃபைலும் இந்த அரசின் காலத்தில் அமைச்சர்கள் யாரும் பார்த்ததில்லை. 2012 முதல் முந்தைய அரசு துவக்கிய நடவடிக்கை முறைகளை இன்றைய சூழலைக் கணக்கில்கொண்டு நிறுத்தி வைப்பதற்கு அரசு உத்தரவிட்டது.  அதாவது, 7 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியிலும் கேரளத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தபோது நடைபெற்ற ஒரு விசயம்- அதுவும் தற்போதைய விவாத விசயத்துடன் நேரடியாகச் சம்பந்தமில்லாமல் செய்தியாக்கி, அதைப் பிரச்சாரம் செய்து, மாநில அரசின் தலையீடுகளைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி நடந்தது. அந்தச் செய்திக்கு அளித்த முக்கியத்துவமும் அதற்குப் பயன்படுத்திய வார்த்தைகளும் மக்களிடையே தவறான புரிதலைப் பரப்புவது என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தது. இது,ஊடகச் செயல்பாட்டில் மறைக்க முற்பட்ட அனேக உதாரணங்களில் ஒன்று மட்டுமே.  அதே சமயத்தில், ஊடகச் செயல்பாடு மற்ற சவால்களையும் நேரிட்டுள்ளது. ஒன்று அடிபணிவது அல்லது அனுபவிப்பது என்றொரு கட்டளை ஊடக செயல்பாட்டா ளர்களின் தலைக்கு மேல் தொங்குகிறது. 

நாட்டின் பல பகுதிகளிலும் பத்திரிகையாளர்களுக்குச் சுதந்திரமா கவும் அச்சமின்றியும் செயல்பட முடிவதில்லை. கௌரி லங்கேஷைப் போன்றவொரு பத்திரிகையாளர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானது இந்திய ஊடக உலகின் இன்றைய பயங்கர நிலைமையின் அடையாளமாகும். அதனால்தான் பத்திரிகைச் செயல்பாட்டாளர்களின் பத்திரிகைச் சுதந்திரப் பாதுகாப்பு என்பதை மிக முக்கியமான விசயமாக அரசு கருதுகிறது. பெரிய அளவில் கார்ப்பரேட் மூலதனம் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்துகிற சூழலில் அந்த மூலதனத்துடன் இணைந்துவருகிற அரசியல் பத்திரிகைகளின் செயல்பாட்டிலும் அது பிரதிபலிக்கும். ஊடகங்கள் சுதந்திரமானது, சார்பற்றது எனக் கூறிக்கொள்ளும் போதே மூலதனத்தின் அரசியலிலிருந்து முழு அளவில் விடுபடவோ, சார்பற்றதாக இருக்கவோ அவற்றால் பொதுவாக முடிவதில்லை.  ஊடகங்களும் ஊடகச் செய்திகளும் அவற்றின் பிரச்சாரமும் பரிசீலனைக்குரியவையாகும். கேரளம் பொய்ச் செய்திகள்மயமாக்கப்படுகிற மாநிலமாக ஆகக்கூடாது.  ஊடகக் கல்வி இயக்கத்தை மக்கள் வலுப்படுத்துவதன் மூலமாகவே அத்தகையதொரு முன்னேற்றம் சாத்தியமாகும்.  உரிமை உணர்வும் சக மனிதர்களோடு நேசமும் உள்ள தொழிலாளி வர்க்கத்திலிருந்தே அது துவங்க வேண்டும்

;