tamilnadu

img

சிஐடியு கோவை மாவட்ட இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா

சிஐடியு கோவை மாவட்ட இன்ஜினியரிங் சங்கத்தின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா புதனன்று துடியலூரிலுள்ள சங்க அலுவலகத்தில் மூத்த தலைவர் யு. கே வெள்ளிங்கிரி தலைமையில்  நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜிடம் 55 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.82,500 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கே. அஜய்குமார் மற்றும் சங்க பொதுச் செயலாளர்  சி. துரைசாமி ஏ. ஜி சுப்பிரமணியன், சண்முகம், பி. ராஜேந்திரன், எஸ். சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.