tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை, ஜன. 29- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு  முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசா ரணை நடத்த வேண்டும் என  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி யுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து வெளி வருகிற செய்திகளே தகுந்த  சான்றுகளாக அமைந்திருக் கின்றன. 

விசாரணைகள் முடியாதி ருக்கும் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மையங்க ளில் 16 லட்சத்திற்கும் மேற் பட்டோர் எழுதிய தேர்வுகளில் வேறு எந்த மையத்திலும் முறை கேடு நடக்கவில்லை என்று அவ சர அவசரமாகக் கூறியது பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இத்தகைய முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்ய முடியாது. தேர்வு முறை கேடுகளுக்கான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களோடு இப்பிரச்சனை முடிந்து விடக் கூடியதல்ல. இது 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது.  இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இடைத்தரகர் கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வு எழுதி, பிறகு வேறு ஒரு மை மூலம் அதையே திருத்தி எழுதும் வகையில் இந்த முறைகேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை தரக்கூடியதாக உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. மீது படிந்தி ருக்கிற அழியாத கறையை துடைக்க வேண்டுமானால், தமி ழக ஆட்சியாளர்களின் கட்டுப் பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையினால் உண்மைகள் வெளிவராது. டி.என்.பி.எஸ்.சி.யை காப்பாற்றுகிற முயற்சி யில் தான் தமிழக ஆட்சியாளர் கள் மறைமுகமாக செயல்படு வார்கள். எனவே, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாண வர்களின் வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கும் வகை யில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு  முறைகேடுகள் வெளிவந்திருக் கின்றன. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த அனைத்து முறைகேடுகள் குறித்தும் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான்  உண்மையான குற்ற வாளிகளை கண்டுபிடிக்கிற வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

;