tamilnadu

img

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவு

கொரோனா நிவாரணப் பணிகளில் சுழன்று பணியாற்றியவர்,  கொரோனா தொற்றி உயிரிழந்திருப்பது துயரத்தை ஏற்படுத்துகிறது : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை,ஜூன் 10- திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செய லாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அன்பழகன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக-வின் மாவட்டச் செயலாள ராக நெடுங்காலம் திறம்பட பணி யாற்றிய ஜே.அன்பழகன், மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு  செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றி யவர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளில் உரத்துக் குரல் கொடுக்கக் கூடிய ஆற்றல்மிக்க வர். சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியவர். கொரோனா தொற்று காரணமாக சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர். இதன் காரண மாகவே, அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப் பது என்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், திமுகவினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.