சென்னை,பிப்.10- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில், அக்கட்சியின் மாவட்டச் செயலா ளர்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகி றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படி திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தி யுள்ளது.