tamilnadu

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ன ஆகும்?

மும்பை, மே 28 -இந்தியாவில் ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உயர்த்தும் நோக்கத்தில் 2020ஆம் ஆண்டுக்குள் 40 பில்லியன் பரிவர்த்தனைகளுக்கு இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலிருந்தே (மோடி) அரசு தரப்பிலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் மக்கள்இன்னமும் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ரொக்கப் பரிவர்த்தனையையே சார்ந்திருக்கின்றனர். எனவேடிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் பொருட்டு, 2020ஆம் ஆண்டுக்குள் 40 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இலக்குநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு மட்டும் 7.7 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அரசு பணித்துள்ளது.பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2018-19 நிதியாண்டில் மொத்தம் 30 பில்லியன்டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இலக்குநிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் 95 சதவிகித அளவு மட்டுமே எட்டப்பட்டது. 2018 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 190 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 2019 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 782 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.மோடி அரசு மீண்டும்ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தீவிரமாக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.