tamilnadu

நாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: காங்கிரஸ்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.புதுதில்லியில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத் திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுத் தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை ஏற்கிறோம். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 12 கோடியே13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.பொதுத் தேர்தலில் காங்கிரஸ்பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று,கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அளித்த ராஜினாமா கடிதத்தை செயற்குழுக் கூட்டம் நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் தலைமை தொடர்ந்து தேவைப்படுகிறது. மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம்.காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டுள்ளோம். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி என்று தெரிவித் துள்ளார்.