tamilnadu

img

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும் திருமணம் நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸூக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும் திங்களன்று திருவனந்தபுரத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவை தவிர்த்து முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸில் திருமண பதிவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மிக குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.  வீணா தகவல் தொழில்நுட்ப தொழிலை சொந்தமாக நடத்தி வருகிறார். முகமது ரியாஸ் மாணவர் அமைப்பின் மூலம் அரசியலுக்கு வந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைமையில் இருந்து அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.