tamilnadu

img

கே.கே.சைலஜா குறித்த தி கார்டியன் கட்டுரை

சமூக ஊடகங்களில் பதிவிட்ட சசிதரூர் எம்.பி

திருவனந்தபுரம்:கேரளத்தை பாராட்டி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவின் படத்துடன் இங்கிலாந்து பத்திரிகையான தி கார்டியன் வெளியிட்டுள்ள கட்டுரையை காங்கிரஸ் கட்சி எம்.பி.சசிதரூர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். கோவிட்டுக்கு எதிரான கேரளத்தின் முன்னெச்சரிக்கையும் துணிச்சலும் பாராட்டுக்குரியதாக கட்டுரை சுட்டிக்காட்டு கிறது. 2020 மே 14, தி கார்டியன் இதழில் வெளியான இந்த கட்டுரை ஞாயிறன்று (மே 17)  தீக்கதிரில் வெளிவந்தது.

சசிதரூர் உட்பட சில காங்கிரசார், கோவிட்டுக்கு எதிரான கேரள அரசின் முன்மாதிரி நடவடிக்கை களை பாராட்டி வருகின்றனர். ஆனால், இத்தகைய பாராட்டுகள் அடுத்த சில மாதங்களில் நடைபெற விருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல்களில் எல்டிஎப் கூட்டணிக்கு ஆதரவான மனநிலையை வலுப்படுத்திவிடும் என அஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர் போன்றவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.