tamilnadu

img

வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையும் எதிர்காலம் - து.ராஜா

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இறுதியில் அறிவிய லின் உதவியுடன், மனிதகுலம் மீளும். இது தொடர்பாக பல சிந்தனைகளும், சித்தாந்தங்களும் உருவாகும். பல்வேறு விதமான வியாக்கியானங்கள் மக்கள் முன்பும், அரசாங்கத்தின் முன்பும் வைக்கப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிந்தைய உலகம், முன்பிருந்தபடியே இருக்குமா அல்லது மாறுமா என்பதும், முதலாளித்துவ அமைப்பு மேலும் மோசமான முறையில் மனிதாபிமானமற்ற ஒன்றாகவும், சுரண்டப்படக்கூடிய ஒன்றாகவும் இருக்குமா என்பதும் நம் முன் உள்ள பிரச்சனையாகும்.  தாமஸ் ஐ ஃப்ரீட்மேன், “கோவிட்-19 ஒரு கருப்பு யானை. இது இயற்கைக்கு எதிராக நாம் அதிக மானமுறையில்  மேற்கொண்டுவந்த நாசகர யுத்தங்க ளின் தர்க்கரீதியான வெளிப்பாடு,” என்று எழுதியிருக்கிறார்.

இயற்கையை பகுப்பாய்வு  செய்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ்

“அனைத்து தத்துவஞானிகளும் உலகைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும், அதனை எப்படி மாற்றுவது என்பதே முக்கியமான பிரச்சனை,” என்று மார்க்ஸ், ஃபாயர்பாக் மீதான விமர்ச னக் கட்டுரையில் எழுதினார். இதுதான், மார்க்ஸ் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணித்த அவருடைய உற்ற தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவார்த்த பின்புலத்தின் அடிப்படை அனுமானமாகும். மனிதகுலத்தின் தோற்றம், மனிதர்களுக்கிடையிலான உறவுகள்;  மனித இனங்கள் மற்றும் பொருளாதாரத்தின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி ஆகியவை குறித்த இயற்கையான வளர்ச்சி மற்றும் வழிமுறைகள் குறித்தும் அவர்கள் பகுப்பாய்வு செய்திருந்தார்கள்.

உபரி மதிப்பின் அடிப்படை உழைப்பே

“உழைப்பே செல்வத்தின் ஆதாரவளம் மற்றும் மனித குலத் தோற்றத்திற்கான அடிப்படை நிபந்தனை” என்று வலி யுறுத்தும் அதே சமயத்தில், மார்க்சும் ஏங்கெல்சும் இயற்கையின் தர்க்கவியலைப் பகுப்பாய்வு செய்திருக்கி றார்கள். மக்கள், நிலம், தண்ணீர் மற்றும் காற்று ஆகிய வற்றுக்கிடையேயான இணக்கமான உறவு எப்படி மாற்றங்க ளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தார்கள். மார்க்ஸ், தன்னுடைய மூல தனத்தில், “உழைப்பு செயல்படுதலில் மனிதனும் இயற்கை யும் பங்குகொள்கின்றனர்,” என்று விளக்கினார். மார்க்ஸ்,  மேலும், உழைப்புச் செயல்பாடு என்பது உற்பத்திக்கான செயல்பாடு என்பதைத் தவிர வேறல்ல என்றும் விளக்கி னார். அவர், உழைப்பே செல்வத்தின் வள ஆதாரம் என்பதையும், எப்படி உழைப்பாற்றல் உபரி மதிப்பைக் கொண்டுவருகிறது என்றும் காட்டினார். இதிலேயே மார்க்ஸ், உபரி மதிப்பை, உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்களான முதலாளிகள் எப்படி மூலதனமாக மாற்றுகிறார்கள் என்பதையும் விளக்கினார். மேலும் அவர், இவ்வாறு உபரி மதிப்பானது ஒரு பக்கத்தில் மூலதனத்தைக் குவிப்பதற்கும், மறு பக்கத்தில் உழைக்கும் மக்களை வறிய நிலைக்குத் தள்ளுவதற்கும் இட்டுச்செல்கிறது என்பதை யும் விளக்கினார். இத்தகைய சமத்துவமின்மை, உழைக்கும் மக்களின் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகளில் பிரதிபலிக்கின்றன.

தொற்று நோய்களின்  பரவலுக்கு காரணம்...

அதேபோன்றே, சமூகத்தின் வீட்டுவசதிப் பிரச்சனை யையும் ஆய்வு செய்யும் சமயத்தில், குறிப்பாக முதலாளி கள் எப்படி வீட்டுவசதிப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்கள் என்று ஆய்வு செய்யும் சமயத்தில், ஏங்கெங்ஸ், “தொழிலா ளர்கள் கூட்டம்கூட்டமாக வாழுமிடங்கள் எப்படியெல்லாம் நகரங்களைப் பாதிக்கக்கூடிய தொற்றுநோய்கள் உற்பத்தி யாகும் இடங்களாக இருக்கின்றன,” என்பதையும் “காலரா, டைஃபஸ், டைஃபாய்டு ஜுரம், அம்மை நோய் மற்றும் சமூ கத்தைச் சூறையாடும் நோய்க் கிருமிகள் உழைக்கும் வர்க்கத்தினரின் குடியிருப்புகளிலிருந்து வெளிவரும் கொள்ளைநோய்களை உருவாக்கும் காற்று மற்றும் விஷமாகிப் போன நீர் ஆகியவற்றால் பரவின,” என்பதை யும் சுட்டிக்காட்டினார். இது, இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் எவரும் கற்பனை செய்ய முடியாத அள விற்கு ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதையும், கோவிட்-19 தொற்றுக்கு இரையாக மாறிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது.

வென்டிலேட்டரில்  உலகப் பொருளாதாரம்

கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகள், உழைக்கும் வர்க்கத்தினரை முதலாளிகள் என்றென்றும் சுரண்டுவதற்குத் தேவையான புதிய உத்தி களையும், திட்டங்களையும் சிந்திக்கத் தள்ளியிருக்கிறது. கோவிட்-19க்கு முன்பு, உலக முதலாளித்துவப் பொரு ளாதாரம் 2008இல் ஒரு நெருக்கடியைச் சந்தித்தது. இதன் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரம், வீட்டுக்கடன் பெற்றவர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்தமுடியாத நெருக்கடியை (subprime loan crisis) எதிர்கொண்டது. தற்போதைய கோவிட்-19 தொற்று உலகப் பொருளாதார அமைப்பையே வெண்டிலேட்டரில் வைக்கக்கூடிய அள விற்குத் தள்ளி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று, அனைத்து நாடுகளை யும் அனைத்து சமூகத்தினரையும் மற்றும் அனைத்து வர்க்கங்களையும் ஒரே விதமாகத்தான் பாதித்துக் கொண்டி ருக்கிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதனைக் கையாள நாம், முதற்கண் அரசாங்கங்க ளை அனுமதித்திட வேண்டும் என்றும்; அதன்பின்னர், நாம் நம்முடைய பிரச்சனைகளுக்காகப் போராட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது சரியல்ல. முதலாளிகள் அதிக புத்திசாலிகள். தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில், முதலாளிகளுடைய அர சாங்கங்கள் தங்கள் கைகளில் மேலும் அதிகமான அளவில் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.    

இந்தியாவில், ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம், நாட்டை ஒரு மதவெறிபிடித்த பாசிச அரசாக மாற்றுவதற்கான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை ஆபத்திற்குள்ளாக்கியுள்ள முதலாளிகள் மற்றும் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராக இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை உக்கிரப்படுத்தி இருக்கிறார்கள்.  

மார்க்ஸ் குறிப்பிட்ட  ‘ஜனநாயகப் புரட்சி’

ஆட்சியாளர்களின் பொய்களையும், தோல்விகளை யும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. மூலதனம், மக்கள் தங்களுக்குள் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ளும் விதத்தில் மதத்தை ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறது. ஆனால், ஆட்சியாளர்களின் மிகவும் வெறுக்கத்தக்க மதவெறி-பாசிச சூழ்ச்சித் திட்டங்களை மக்கள் புரிந்துகொள்வார்கள். சமூகத்தில் மோதல்களை உருவாக்கும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளையும் அதன் மூலம் சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் வேலையினை யும் அவர்கள் மேலும் அனுமதிக்கமாட்டார்கள். 

மார்க்ஸ், இந்தியாவின் சமூகக் கலாச்சார அமைப்பை நுணுகி ஆராய்ந்தபோது, இங்கே சாதி வகித்திடும் பாத்திரத்தை நன்கு அறிந்திருந்தார். சீனாவில் தைப்பிங் கிளர்ச்சி, இந்தியாவில் சிப்பாய்கள் கலகம் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்) மற்றும் அமெரிக்காவில் கறுப்பர் இன எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பின்னர், மார்க்ஸ் தமது படைப்புகளில், இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்ளவேண்டியதன் அவசரத் தேவையைக் குறிப்பிட்டிருந்தார்.   “ஜனநாயகப் புரட்சி” என்னும் மார்க்சின் சொற்றொடர், சாதிய அமைப்பு முறையை ஒழிக்க வேண்டிய தற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்திப்பிடிக்கிறது. புதிய உலகுக்கான தத்துவார்த்த நுண்புலத்தில், மார்ச்சியம் ஒரு புரட்சிகரக் கருத்தியலாகவும் அறிவியலாகவும் உயர்ந்து நிற்கிறது.

வரலாற்றை உந்தித் தள்ளும் விசை

மாமேதை லெனின் சுட்டிக்காட்டியதுபோல, மார்க்சி யத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளாக விளங்கும், தர்க்க வியல் பொருள்முதல்வாத (வரலாற்றுப் பொருள்முதல்வா தம்) தத்துவம், உபரி மதிப்பு விதி மற்றும் வர்க்கப் போராட் டத்தின் கொள்கை ஆகிய மூன்றும் வரலாற்றை உந்தித் தள்ளும் விசையாக விளங்குகின்றன.    

அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கப் போராட்டங்க ளைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் எதிர்காலம் சென்று கொண்டிருக்கிறது. அப்போதுதான் ஒரு புதிய சமூக அமைப்பு உருவாகும். அத்தகையதொரு சமூக அமைப்பில் அரசு அனைத்துக் குடிமக்களுக்கும் வீட்டு வசதி, சுகாதார நலன், கல்வி மற்றும் வாழ்வாதாரங்க ளுக்கான அனைத்து வசதிகளையும் அளித்திடுவதோடு, அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம், நீதி மற்றும் கண்ணியமான வாழ்க்கையையும் உயர்த்திப்பிடித்திடும்.

மாமேதை மார்க்சின் பிறந்த நாளான மே 5 அவருக்கு செவ்வணக்கங்களைச் செலுத்துகிற அதே சமயத்தில், முதலாளித்துவ சமூக அமைப்பைத் தூக்கி எறிந்திடக்கூடிய விதத்திலும், தொழிலாளர்களின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் சங்கிலித்தளையிலிருந்து விடுவித்திடக்கூடிய விதத்திலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

நன்றி : ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மே.5 
தமிழில்: ச.வீரமணி

 


 

;