tamilnadu

img

நாளை மனிதச் சங்கிலி இயக்கத்தில் விவசாயிகள் சங்கம் பங்கேற்கிறது

சென்னை,ஜன.28- குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஜனவரி 30 அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்ப தாவது:  மத்தியில் ஆளும் பாஜக அரசு குடி யுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை  பதிவேடு எனும் மும்முனை தாக்குதலை இந்திய மக்கள் மீது தொடுத்துள் ளது. அனைத்துப் பகுதி மக்களின் குடியுரிமையையும் சந்தேகத்துக்கிடமான தாகவும், மதஅடிப்படையில் மக்களை பிளக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் நோக்கத் திற்கு உதவிடும் வகையிலும் மத்திய அரசு இந்த மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த சட்டவிரோத நட வடிக்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இதன் தொடர்ச்சியாக காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடத்திட பல்வேறு அமைப்புகள் அறை கூவல் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடை பெறவுள்ள மனிதச் சங்கிலி இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது குடியுரிமையைப் பாதுகாக்க நடக்கும் மனித சங்கிலி இயக்கத்தில் தமிழக விவசாயிகள் பெருமளவு பங்கேற்று மத்திய அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

;