tamilnadu

img

மாணவர் இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் - சிபிசிஐடி

மாணவர் இர்ஃபானின் தந்தை போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை மருத்துவர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் செப்டம்பர் 29 ஆம் தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நேற்று தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜூவிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.    இந்நிலையில் மாணவன் இர்ஃபான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் நேற்று ஆஜரானர். ஆஜரான மாணவன் இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் இர்பான் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். 
இந்நிலையில் இர்ஃபானின் தந்தை முகமது ஷபி  போலி மருத்துவர் என்பதும், வாணியம்பாடி பகுதியில்  போலியாக இரண்டு கிளீனிக்குகளை நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

;