tamilnadu

img

வெளிநாடுகளிலிருந்து கேரளம் திரும்ப ஏற்பாடுகள்

பிரதிநிதிகளுடன்  பினராயி விஜயன் காணொலி உரையாடல்

திருவனந்தபுரம், ஏப்.27- வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்ப தயாராகிவரும் கேரளியருடன் முதல் வர் பினராயி விஜயன் காணொலி மூலம் உரையாடல் நடத்தினார்.  பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளின் பிரதிநிதிகளு டன் ஞாயிறன்று காணொலி மூலம் நடத் திய கலந்துரையாடலின் போது கேரள முதல்வர் மேலும் கூறியதாவது: 

வெளிநாடுவாழ் மலையாளிகள் ஊர் திரும்புகையில் கேரளத்தில் உள்ள 4 விமான நிலையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் நோய் அறிகுறிகள் இல்லை என்றால் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும். வீடுகளில் அதற்கான வசதி இல்லாத வர்கள் அரசு தயார் செய்துள்ள கண்கா ணிப்பு மையத்தில் தங்கி இருக்க வேண்டும்.

நோர்க்காவின் உதவி 

வெளிநாடுவாழ் கேரளியருக்கு உத வும் நோர்க்கா டெஸ்க் (உதவி மையம்) தற்போது செயல்பட்டு வருகிறது. ஏரா ளமானோர் பல்வேறு சிரமங்களை அனு பவித்து வருகிறார்கள். அவர்களை யெல்லாம் கண்டறிந்து உதவும் ஒற்று மையான பணி பாராட்டுக்குரியது. மற்ற நாடுகளில் பயணத்துக்கான வசதி இல் லாமல் சிக்கியுள்ள பலர் ஊர் திரும்ப பெரும் முயற்சி செய்கிறார்கள். இதற் காக சம்பந்தப்பட்ட அரசுகளுடன் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடமிருந்து சில அறிகுறிகள் கிடைத்ததைத் தொட ர்ந்து இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. காலதாமதமின்றி பயணத்துக்கான வசதி செய்யப்படும் என்பது எதிர் பார்ப்பு. 

ஊர் திரும்பும் வெளிநாடுவாழ் கேரளியர் பதிவு செய்ய www.norkaroots.org என்கிற இணைய தளத்தை நோர்க்கா உருவாக்கி யுள்ளது. இதில் பெயர்களை பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் சிக்கலின்றி அவர்களை அழைத்துவர முடியும். விமானத்தில் ஏறுவது முதல் வீடுகளில் வந்து சேரும் வரை உதவு வதற்கான ஏற்பாடாகும் இது. விமான நிலையத்துக்கு வருவோருக்கு வர வேற்பு ஏற்பாடுகள் கூடாது. சொந்த வாகனம் இருந்தால் ஓட்டுநர் மட்டுமே இருக்க வேண்டும். வீட்டுக்கு செல்லும் வழியில் நண்பர்கள் உறவினர்கள் உட்பட யாரையும் சந்திக்க கூடாது. நோய் அறிகுறியுடன் வருவோர் கூடு தல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள். அத்தகைய நபர்கள் கொரோனா மருத்துவமனையில் அனு மதிக்கப்படுவார்கள். அவர்களது உட மைகள் சம்பந்தப்பட்ட மையங்களில் பத்திரமாக பாதுகாக்கப்படும். 

விமானத்தில் முன்னுரிமை

லேபர் கேம்புகளில் வேலையும் வரு வாயும் இல்லாமல் இருக்கும் சாதாரண தொழிலாளர்கள், விசிட்டிங் விசா காலாவதியானவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி, குழந்தைகள், பிற நோய் கள் உள்ளவர்கள், விசா முடித்த வர்கள், படிப்பை முடித்த மாணவர்கள், மாணவர் விசாவில் உள்ளவர்கள் மற் றும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசின் முடிவே இறுதியானது. திரும்பி வருவோரது குழந்தைகள் கேரளத்தில் படிக்க விரும்பினால், அரசு அதை நிறைவேற்றும். அது குறித்து கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு முதல்வர் கூறினார். 

காணொலி உரையாடலில் ஷார்ஜா விலிருந்து எம்.எம்.யூசுப் அலி, ரவி பிள்ளை, டாக்டர் ஆசாத் மூப்பன், ஜான்சன், யுஏஇ-யிலிருந்து சம்சு தீன், ஓ.வி.முஸ்தபா, புத்தூர் ரகுமான் மற்றும் ஓமன், பஹ்ரைன், சவுதி, குவைத், கத்தார், மஸ்கட், சலாலா ஆகிய நாடுகளிலிருந்து மலையாளி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


 

;