tamilnadu

img

அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... 

சென்னை 
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த நிலை நாளை தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாகவும் வலுவடையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
மேலும் மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதால் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  45-55 கி.மீ சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சில சமயங்களில் மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் மேற்கூறப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.  

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

;