ராஞ்சி,செப்.1- பீகார் முன்னாள் முதல மைச்சர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிட மாக உள்ளதாகவும் அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்படுவதாகவும் மருத்துவ மனை வட்டாரத்தில் தெரி விக்கப்படுகிறது. ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சரு மான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக் கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2017–ல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். அங்கு அவர் நீண்ட நாட்க ளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழனன்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. லாலு பிர சாத் யாதவின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாகவும், அவரது உடலில் ரத்த ஓட் டம் சீராக இல்லை என்றும் மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.