tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் - வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற காவல்துறை 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் பாதையை இயக்கத்தினர் சென்னை தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 6 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.

மக்கள் பாதை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 6 பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் 7 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அவர்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

;