tamilnadu

img

டப்பிங் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு சின்மயி போட்டி 

சென்னை 
தென்னிந்திய திரையுலகில் முக்கிய துறைகளுள் ஒன்றான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

அதிகாரமிக்க இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு முதல் தலைவர் பதவியில் அமர்ந்துள்ள ராதாரவியின் பதவி காலம் ஏற்கெனவே நிறைவடைந்த புதிய தலைவர் பதவிக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக ராதாரவி அறிவித்துள்ளார்.  அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணி சார்பில் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து வியாழனன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.போட்டியின்றி தேர்வாகலாம் என கனவு கண்ட ராதாரவிக்கு சின்மயி செக் வைத்துள்ளார்.   

சின்மயி களமிறங்கக் காரணம் 
‘மீடூ’ விவகாரத்தில் சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் போக்கிற்குப் பழிவாங்கும் முனைப்பில் சின்மயி சந்தா செலுத்தவில்லை எனக்  கூறி சங்கத்தில் இருந்து ராதாரவி நீக்கினார். பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார். இதனால் தான் தற்போது ராதாரவியை எதிர்த்துத் தேர்தலில் களமிறங்குகிறார்.   

;