tamilnadu

img

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மர்மநபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக கூறியுள்ளார்.  உடனடியாக நடிகர் விஜயின் வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள்  (நள்ளிரவில்) சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவர, மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் அந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் எனவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் சாலிகிராமம் நள்ளிரவு நேரத்தில் பெரும் பரபரப்பான சூழலை சந்தித்தது.  

;