tamilnadu

img

நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

சென்னை,ஜன.30- இசையமைப்பாளரும் நடிகரு மான டி.எஸ்.ராகவேந்திரா உடல் நலக்  குறைவால் சென்னையில் வியாழ னன்று (ஜன.30) காலமானார். அவருக்கு  வயது 75.  வைதேகி காத்திருந்தாள் படத்தில்  நடிகை ரேவதியின் தந்தையாக திரை யுலகிற்கு அறிமுகமானவர். சிந்து பைரவி, சின்ன தம்பி  பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட படங்  களில் நடித்துள்ளார். உயிர், படிக்காத பாடம், யாக சாலை  ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  பின்னணி பாடகி சுலோச்சனாவை திருமணம் செய்து  கொண்ட டி.எஸ்.ராகவேந்திராவிற்கு, 2 மகள்கள் உள்ளனர்.  கே.கே.நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

;