மத்திய அரசாங்கத்தின் 5 பேர் கொண்ட குழு மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று ஏப்ரல் 30ல் 42,000ஐ தொடும் எனவும் மே 15 வாக்கில் 6,56,000 வரை செல்லும் எனவும் கூறியதாக இந்து பத்திரிக்கையை மேற்கோள் காட்டி ஸ்க்ரால் இணைய ஏடு தெரிவிக்கிறது.
மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று மே மாதத்தில் 6.5 லட்சத்தை தொடும் என்ற மதிப்பீடு அடிப்படையில், மஹாராஷ்டிராவில் உள்ள லட்சக்கணக்கான இடம் பெயர் உழைப்பளிகளை தமது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசாங்கம் உதவிட முன்வர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.