tamilnadu

img

வாய்க்கால் சுவர் அமைக்கும் பணி ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 6-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் நடுவில் ஆவணத்தில் உள்ள காவிரி மெயின் வாய்க்காலில் இருந்து பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு வழியாக கழனிவாசல் வரை செல்வது ஆனந்தவல்லி வாய்க்கால். ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறும் இந்த வாய்க்கால் பல இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பக்கவாட்டு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக பேராவூரணி மெயின்சாலையில் டாக்டர் ஜவஹர் மருத்துவமனை முன்பு, வாய்க்கால் தூர்ந்து போன நிலையில் கரைகள் வலுவிழந்து இடிந்து விழுந்தது. மேலும் அருகிலேயே ரயில்வேபாலம் செல்லும் வழி அடைக்கப்பட்ட நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வந்தாலோ, பெருமளவில் மழை பெய்தாலோ, ஆற்றின் கரைகள் உடைபட்டு தண்ணீர் நகருக்குள் புகுந்து விடும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ15 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து பணிகள் தொடங்கி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுவருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஆனந்தவல்லி வாய்க்கால் கரையில் பக்கவாட்டு சிமெண்ட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டார். அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்யுமாறு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ.மதிவாணன், நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆர்.பி.ராஜேந்திரன், பொறியாளர் கோவி.இளங்கோ, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் டாக்டர் மு.சீனிவாசன், ஆதனூர் ஆனந் தன் உடனிருந்தனர்.

;