tamilnadu

img

சாலையில் நாற்று நடும் போராட்டம் கும்பகோணத்தில் சிபிஎம் நடத்தியது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு சாலைகள் சீர் செய்யப்படாமல் தற்போது பெய்த மழையில் சாலையில் நடக்க முடியாமல் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் சீர் செய்ய கோரி பல தடவை நகராட்சி ஆணையரை சந்தித்து கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.  ஆனால் நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் கும்பகோ ணம் மேலக்காவேரி பகுதியில் சேறும் சகதியாக உள்ள புதுத்தெரு புதுரோடு சாமியானா  தெரு உள்ளிட்ட மேலக்காவேரி பகுதியில் உள்ள ரோட்டில் குடந்தை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாகராஜன், நகர குழு உறுப்பினர்கள் ஆர். ராஜகோபாலன், எஸ்.பி.நாகராஜன், சுப்புராமன், அயூப்கான் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் மேலக்காவேரி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன் சிபிஎம் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் சாலைகள் போட நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். விரைவில் சாலைகளை போர்க்கால அடிப்படை யில் சீர் செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர். 

;