tamilnadu

img

தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு?

மதுரை, ஜன.28- தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதி மதுரைக்கிளை  தீர்ப்பை புதனன்று அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம்தமிழர்  கட்சியின்  மாநில ஒருங்கிணைப்பா ளர் செந்தில்நாதன், தமிழ் தேச பொது வுடமைக் கட்சியின் தலைவரும் தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழ் போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளருமான பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில்,” தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற சைவ வழிபாட்டுத் தலம். பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியச் சின்னம் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலின் குட முழுக்கு விழாவை தமிழில்,  நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தனர். இந்த மனுக்களோடு மயிலாப்பூர் ரமேஷ் என்பவர் கும்பாபிஷேகம் சமஸ்கிருதத்தில் தான் நடத்த வேண்டுமெனக் கோரியிருந்த மனுவும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வில் செவ்வா யன்று விசாரணைக்கு வந்தன.

கோவில் தரப்பில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களிலும் குடமுழுக்கு, முக்கிய பூஜைகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது எதிர்த்தரப்பிற்காக ஆஜரான வழக்கறிஞர் லஜபதி ராய், ‘‘கோவிலில் ஒரு குறிப்பிட்ட  சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அரசின் வேத ஆகம பாடசாலை களில் அனைத்து சாதியைச் சேர்ந்த  அர்ச்சகர்களும் பயிற்சி பெற்றுள்ள னர். இவர்கள் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்கள் தான். இவர் களை வைத்து குடமுழுக்கு நிகழ்ச்சி களை நடத்த வேண்டும்” எனத் தெரி வித்தார். கோவிலில் தீ விபத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பதற்காக, யாக குண்டங்களை கோவிலுக்கு வெளிப்பகுதியில் அமைத்துள்ளதாக  அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை  புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.  இதற்கிடையில், தஞ்சாவூர் பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா  தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என இந்து சமய அற நிலையத்துறை  சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தெரி வித்தது.  அதைப் பிரமாணப் பத்திர மாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கறிஞர் சர வணனின் மனுவிற்கு, மத்திய தொல்லியல்துறையின் அனுமதி யுடன் தான் தஞ்சாவூர் பெரிய கோயி லில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது  என மத்திய தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனு முடித்துவைக்கப்பட்டது. 

;