தஞ்சை அருகே இருவருக்கு கொரோனா
தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் மாவட்டம் நெல்லியடிக் காடு பகுதியை சேர்ந்த 27 வயது ஆண் மற்றும் விளங்குளம் ஊராட்சி அம்மணிசத் திரம் பகுதி 22 வயது ஆண் ஆகிய இரு வர் கடந்த 18-ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். அவர்களை, வருவாய், சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தினர். கடந்த 20 ஆம் தேதி வந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து இருவரும் 108 சிறப்பு ஆம்பு லன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அப்பகுதி களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
படகு விபத்து: மேலும் 2 மீனவர் உடல் மீட்பு
தஞ்சாவூர், ஜூன் 21- ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜேசு (60), ரெஜின்பாஸ்கர் (44), மலர்வண்ணன் (48), ஆஸ்டின் சுசீந்தர் (19) ஆகியோர் கடந்த 13-ஆம் தேதி விசைப்படகு மூலம் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் படகு பழுது ஏற்பட்டு மூழ்கியது. இதில் ஜேசு மட்டும் உயிர் தப்பினார். மற்ற மூவ ரும் கடலில் மூழ்கினர். அவர்களை, மீன வர்கள், அதிகாரிகள் தேடி வந்த நிலை யில் வெள்ளிக்கிழமை மதியம் தஞ்சை சேதுபாவாசத்திரம் அருகே ரெஜின்பாஸ் கர் உடல் கடலில் மிதந்ததை கண்டுபிடித்து மீட்டனர். தொடர்ந்து சனிக்கிழமை மாலை ஆஸ்டின் சுசீந்தர் என்பவரது உடல் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மலர்வண்ணன் உடல் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக் கரை கடல் பகுதியில் மீட்கப்பட் டது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் திறப்பு
தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் அருகில் ரூ.39.56 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், தஞ்சாவூர்- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ரூ.1.08 கோடியில் நீதி பதிகளுக்கான விருந்தினர் மாளிகை, ஒரத்தநாட்டில் ரூ.3.44 கோடியில் நீதி மன்ற கட்டடம், தஞ்சாவூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடு தல் மகிளா நீதிமன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி பதி அம்ரேஸ்வர் பிரதாப் சாகி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத் தார். நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு, முதன்மை மாவட்ட நீதிபதி வி.சிவஞானம், ஆட்சியர் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா கால பிரச்சனைக்கு அணுகலாம்
தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்ட மக்கள், கொரோனா குறித்த தேவை யற்ற பயம், பதற்றம், மது, போதை போன்ற பழக்கங்களினால் ஏற்படும் மனப் பதற்றம் உள்ளிட்ட மனநல பிரச்சனை களுக்கு ஆண், பெண்கள் மற்றும் சிறு வர்களுக்கும் ஆலோசனை பெற 97862-53527, 97518-49953, 94424-04953 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை ஆட்சியர் மகோவிந்தராவ் தெரி வித்துள்ளார்.
கல்லணைக் கால்வாயில் சாக்கடை நீர் கலப்பு
தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதி யில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற் றின் மேல் செல்லும் கழிவுநீர் குழாயில் கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆற்று நீரில் கலந்து செல் கிறது. இதன் காரணமாக நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் சாக்கடை குழாய் உடைப்பெடுத்த பகுதி யை பார்வையிட்டு, மாநகராட்சி ஆணை யரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரி வித்து உடனடியாக ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.