tamilnadu

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செய்திகள்

மறைந்த பத்திரிகையாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை 
கும்பகோணம், ஜூலை 16-  கும்பகோணம் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் அர்ச்சனா டவரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த பத்திரிகையாளர் ஆர்.பாலா சடாட்சம் தலைமை வகித்தார். பிடிஐ செய்தியாளர் ஆர்.கண்ணன், இந்து தமிழ் செய்தியாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த பத்திரிகையாளர்கள் கிருஷ் ணன், பாலகுரு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய தலைவராக தினமலர் சீனிவாசன், செயலாளராக தினகரன் ஆறுமுகம். பொருளாளராக மாலைமலர் சிராஜிதீன், துணைத் தலைவராக புதிய தலைமுறை முரளி, துணைச் செயலாளராக தினத்தந்தி ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள் வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களை அச்சுறுத்தும் முதலை
கும்பகோணம், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆறு, குளங்கள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளதால், உண விற்காக அவ்வப்போது கொள்ளிடம் குடியிருப்பு பகுதியில் முதலை நடமாட்டம் அதிகமாக தென்பட்டு வந்தது.  இந்நிலையில் கொள்ளிடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி கிராமம் மண்ணியாறு மெயின் ரோட்டில் திடீ ரென சுமார் ஐந்தடி நீளமும் 50 கிலோ எடையும் உள்ள முதலை அப்பகுதியில் வசித்து வரும் ஐயம்பெருமாள் வீட்டு அருகே, கொட்டகையில் உள்ள ஆடுகளை உண்பதற்காக பதுங்கி இருந்தது.  திருப்புறம்பியம் கூட்டுறவு தேர்தலை முடித்துவிட்டு நள்ளி ரவு 2 மணி அளவில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி. நாகராஜன், வழக்கறிஞர் தட்டுமால் சங்கர், கொத்தங்குடி செந்தில் ஆகியோர் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது முதலையை பார்த்தனர். உடனே தீயணைப்பு துறைக்கு தக வல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வனத்துறையிடம் தெரி விக்குமாறு கூறியதால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த கிராம மக்கள் முதலையை பிடித்து, காலையில் வந்த வனத் துறை சாலை பணியாளரிடம் ஒப்படைத்தனர்.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் வழங்கும் முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 16 - தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2019-20-ம் நிதியாண்டிற்கு ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கறம்பக்குடி வட்டத்தில் வியா ழனன்று (ஜூலை 18) காலை 11 மணிக்கும், ஆலங்குடி வட்டத்தில் 19.7.2019 பிற்பகல் 3 மணிக்கும், இலுப்பூர் வட்டத்தில் 20.7.2019 காலை 11 மணிக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 23.7.2019 காலை 11 மணிக்கும், பொன்னமராவதி வட்டத்தில் 24.7.2019 காலை 11 மணிக்கும், மண மேல்குடி வட்டத்தில் 26.7.2019 காலை 11 மணிக்கும் முகாம் நடைபெற வுள்ளது.  திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புற மாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவிகிதம் வட்டி விகி தத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவிகிதம் பெண்களுக்கு 6 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000 ஆண்டிற்கு 7 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.  சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் ரூ.30,00,000 வரையிலும் 3 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை யினர்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உரிய ஆவ ணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.