tamilnadu

img

தமிழ்ப் பல்கலை. சார்பில் தென்னாப்பிரிக்காவில் தமிழாசிரியர்களுக்கு பயிற்சிப் பயிலரங்கம்

தஞ்சாவூர், ஜன.23- தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் தமிழாசிரி யர்களுக்கு இலக்கிய-இலக்க ணம் மற்றும் பேச்சுத்தமிழ் குறித்த பயிலரங்கம் பத்து நாட்கள் நடை பெற்றது.  தமிழக அரசின் நிதி ஒதுக்கீட் டின் கீழ், தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பாக, தமிழ்ப் பல்க லைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பில் தென்னாப்பி ரிக்காவிலுள்ள தமிழாசிரியர்க ளுக்காக ஜன.5 முதல் 14 ஆம் தேதி வரை இப்பயிலரங்கம் நடத்தப் பட்டது. டர்பன் நகரில் 80 ஆண்டு களாகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் மியர்பேங்க் தமிழ்ப் பள்ளிச் சங்கத்தின் ஒத்துழைப்பு டன் நடத்தப்பட்ட தமிழாசிரி யர்களுக்கான சிறப்புப் பயில ரங்கில், 123 தமிழாசிரியர்களும், இளந்தமிழ் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கத்தில் 85 மாணாக்கர் களும் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்க அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழி வகுப்பு கள் நிறுத்தப்பட்டு முப்பதாண்டு கள் கடந்து விட்ட நிலையில், ஏறத்தாழ தமிழ்மொழி அழியும் சூழலில் மிகப் பொருத்தமான நேரத்தில் இப்பயிலரங்கம் நடத்தப்பட்டிருப்பது, மீண்டும் தமிழை உயிர்ப்புடன் செயல்பட வைத்திருப்பதாக, இப்பயில ரங்கத்தின் நிறைவு விழாவில் பங் கேற்ற தென்னாப்பிரிக்காவின் மூத்த தமிழ்ப் பற்றாளர்கள் தெரி வித்தனர்.  தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம், நடால் மாகா ணத்தின் பிற பகுதிகளில் உள்ள தமிழாசிரியர்கள், ஜோகன்னஸ் பர்க் மற்றும் கேப்டவுன் ஆகிய நகரங்களில் இருந்து தமிழாசிரி யர்கள் பலர் இப்பயிலரங்கில் பங்கேற்றனர்.
துணைவேந்தர் செய்தி
தென்னாப்பிரிக்கத் தமிழாசிரி யர்களுக்கான பயிற்சி மற்றும் பேச்சுத்தமிழில் இளந்தமிழர் களுக்குச் சிறப்புப் பயிற்சி ஆகிய வற்றைத் தொடர்ந்து தமிழ்ப் பல்க லைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையம் வாயிலாக இணைய வழிச் சேவையாக அளிக்கவுள்ள தாக, இப்பயிலரங்கத்தின் நிறை வில் சான்றிதழ் அளிப்பு விழா விற்கு அனுப்பிய செய்தியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் கோ.பாலசுப்ர மணியன் குறிப்பிட்டிருந்து, தென் னாப்பிரிக்கத் தமிழ்ச் சங்கங்களி டையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.  தென்னாப்பிரிக்காவிலிருந்து விரைவில் மியர்பேங்க தமிழ்ப் பள்ளிச்சங்கத்தின் பொறுப்பா ளர்கள் விரைவில் தமிழ்ப் பல்க லைக்கழகம் வந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள உள்ளதாக இப்பயி லரங்கத்தின் ஒருங்கிணைப்பாள ரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையின் பேராசிரியருமான இரா.குறிஞ்சிவேந்தன் தெரி வித்தார்.  பத்துநாள் பயிலரங்கத்தின் வகுப்புகளை தென்னாப்பிரிக்கா வுக்கான இந்தியத்தூதர் அனிஷ் ராஜன், இந்திய அரசின் விவேகா நந்தா பண்பாட்டு மைய இயக்கு நர் யோகி ஆகியோர் பார்வை யிட்டு, இம்முயற்சியைப் பாரா ட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகப் பயிற்றுநர் குழுவுக்கு வாழ்த்து களைத் தெரிவித்தனர்.
நன்றி தீர்மானம் 
தமிழக அரசின் பெருமுயற்சி க்கும் நிதிநல்கைக்கும் உதவிய தமிழக முதல்வர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அரசுச்செயலர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, தென்னாப்பி ரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்ட மைப்பின் சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;