tamilnadu

தமிழ்ப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

தஞ்சாவூர், ஜூலை 4- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தொலை நிலைக்கல்வி இளங்கல்வியியல் பாடத்திற்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறி க்கையில், ‘தமிழக அரசு, கொரோனா காரணமாக ஜூலை 31 வரை பொது முடக்கம் அறிவித்துள்ளதால், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி தேர்வுப்பிரிவின் வழி, ஜூலை 20 முதல் 27 வரை நடத்தப்பட இருந்த இளங்கல்வியியல் பாடப் பிரிவு க்கான எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. புதிய தேர்வுக்கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.