tamilnadu

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்திட மாணவர்கள் கோரிக்கை

கும்பகோணம், செப்.5- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன் புகார் மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில் தெரிவித்திருப்பதா வது: தஞ்சை மாவட்டம் கும்பகோணத் தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி யில் தொடர்ந்து மாணவிகளை பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக தலித் மாணவர்களை வஞ்சிக்க கூடிய வகை யில் ஆய்வியல் நிறைஞர் மாண வர்களின் ஆய்வுகளை அவர்களின் நெறியாளர்கள் முடித்து தர மறுக்கி றார்கள் அது மட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே தலித் மாணவர் களை சாதியை கூறி திட்டுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சில பிரச்சனைகளை கல்லூரிப் பேராசிரியர்கள் பேசி முடித்து பிரச்ச னையை வெளி வராமல் தடுத்து விடு கின்றனர். தற்போது ஒரு வார காலத்திற்கு முன்பு விலங்கியல் துறை யின் ஆய்வில் நிறைஞர் பயின்ற மாணவி கௌசல்யா என்பவருக்கு அவரது நெறியாளரான பேராசிரியர் மன உளைச்சலை ஏற்படுத்தி தற் கொலை முயற்சி செய்து அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்த நிகழ்வானது அனைத்து ஊடக மற்றும் நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது. இதனைப் பற்றி கல்லூரி நிர்வாகம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. எனவே மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான பேராசிரியர் ரவிச்சந்திரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மாண வர்களின் நலன் கருதி மாணவர் களையும், கல்லூரியையும் பாதுகாக்கு மாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;