அரசு கல்லூரியில் இணையவழி கல்வியை ரத்து செய்யகோரி கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், கும்பகோணம் நகரத்தலைவர் விக்னேஷ், அருண்ராஜ், ராமன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.