tamilnadu

நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஜன.9- தஞ்சாவூர் மாவட்ட நல வாரியத்தில் பதிவு  செய்து கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் மா.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மூலம் நரிக்குறவர் நலவாரிய உறுப்பி னர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரிய உறுப்பி னர்களுக்கு விபத்து மரணம், விபத்தில் ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை,  மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம், தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்தி ட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுபட்ட நரிக்கு றவர் இன மக்கள் நரிக்குறவர் நல வாரிய த்தில் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் சீர்ம ரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திடவும், ஏற்கனவே பதிவு செய்ய ப்பட்ட உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையும் வகையில் தஞ்சா வூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வட்ட அலுவல கங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.  தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் பிப்.6, திருவையாறில் பிப்.13, பூதலூரில் பிப்.20, ஒரத்தநாட்டில் பிப்.27, பட்டுக்கோட்டையில் மார்ச் 5, பேராவூரணியில் மார்ச் 12, பாப நாசத்தில் மார்ச் 19, கும்பகோணத்தில் மார்ச் 26,  திருவிடைமருதூரில் ஏப்ரல் 2, புதிய மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 9 அன்றும்  முகாம்கள் நடைபெற உள்ளன. இதனை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு” கேட்டுக் கொண்டுள்ளார்.

;