tamilnadu

img

சமூக வலைதளங்களில் அவதூறு தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாகை, திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

 தஞ்சாவூர், ஜூலை 23- சமூக வலைதளங்களில் ஆபாசமாக வும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதி விட்ட சமூக விரோதிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமை கட்சியினர் சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செய லாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், பி.செந்தில்குமார், மாவட் டக்குழு உறுப்பினர் சரவணன், காங்கி ரஸ் மாநகர மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, மக்கள் அதிகாரம் மாநி லப் பொருளாளர் காளியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலா ளர் ஜெய்னுல் ஆபிதீன், இந்திய ஜன நாயக கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சிமி யோன் சேவியர் ராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பேராவூரணி பெரியார் சிலை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செய லாளர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செய லாளர்கள் ராஜமாணிக்கம், ரவி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கருப்பையன், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழக மக்கள் புரட்சி கழகம் ஆறு.நீலகண்டன், திராவிடர் கழ கம் நீலகண்டன், திராவிடர் விடுதலைக் கழகம் திருவேங்கடம் மற்றும் பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர் கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா, சிபிஐ மாநகர் மாவட்ட செய லாளர் திராவிட மணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், சம்பத், லெனின், கே.சி.பாண்டியன், பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன், வேலுச்சாமி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகர செயலாளர் உசேன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், சிபிஐ புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித், விடு தலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட பொருளாளர் மதனகோபால், திராவிடர் கழக சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  துவாக்குடிமலை அண்ணாவளை வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, தி.க.ஒன்றிய செயலாளர் தமிழ்சுடர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் திசைகுமார், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.  துறையூர் பேருந்து நிலையம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் கணேசன், சிபிஎம் துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், உப்பிலி யபுரம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உரையாற்றினர். லால்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், சிபிஐ நகர செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கரூர்
கரூர் பேருந்து நிலையம் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் ரத்தினம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு, திமுக நகர செயலாளர் கனக ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஏஐசி டியு சங்க மாவட்ட செயலாளர் வடி வேலன், நகர செயலாளர் சிங்காரம் கண்டன உரையாற்றினர்.  வேலாயுதம்பாளையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், திமுக மேற்கு மண்டல செயலாளர் சேகரன் உள்ளிட்டோர் பேசினர்.  குளித்தலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் உரையாற்றினர். சிபிஐ சார்பில் மகா லிங்கம், லோகநாதன், தங்கராசு உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை
நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி கண்டன உரையாற்றினார். சிபிஎம். சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணி யன், ப.சுபாஷ்சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா, சி.பி.ஐ.சார் பில் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், வி.சரபோஜி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். தலைஞாயிறு பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் டி.மகேந்தி ரன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் அ.வேணு, கே. அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்எஸ் கார்த்திக், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, விசிக மாவட்ட பொருளா ளர் வெற்றி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே.பாலசுப்ரமணியன், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே.முருகையன், நகர செய லாளர் மார்க்ஸ், சிபிஎம் நகரச் செய லாளர் சி.செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி வெட்டாறு ஆற்றுப் பாலத்தின் அருகே சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜ.வி.நாக ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.கந்தசாமி, எம்.சேகர் உள் ளிட்டோர் கலந்துகொண்டார்கள். வலங்கைமானில் கட்சி ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன், வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் ஜெ.ஜெயராஜ், மாவட்ட பொருளா ளர் எஸ்.இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் பி.விஜய் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

;