சென்னை:
மன்னிப்புக் கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை என்றும் அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும் என்றும்மாரிதாசுக்கு ஊடகவியலாளர் மு.குணசேகரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ்கும்பல் பல குறுக்கு வழிகளைகையாளுகின்றன. இதில் ஒருவகையாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய் களை வெளியிடுவதற்கும் பார்வையாளர்களான மக்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதற்கும் சிலசமூக வலைத்தள கூலிப்படைகும்பலை பாஜக களம் இறக்கியுள்ளது.
அப்படி திட்டமிட்டு பொய்தகவல்களை பரப்புவதற்குகளம் இறக்கப்பட்டவர் களில், முதன்மையான மோசடியாளர் மாரிதாஸ். பாஜகமற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட் கும் ஊடகவியலாளர்களை மாரிதாஸ் அவதூறாகச் சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக் காட்சியின் முன்னாள் முதன்மை ஆசிரியரான குணசேகரன் பற்றியும் மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் மற்றும் மூத்த செய்தியாளர் அசீப் உள்ளிட்டோர் குறித்
தும் அவதூறாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோக்களில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியும் பெரும்பாலானோர் திராவிடர் கழகம் மற்றும் திமுகவின் பின்னணியில் செயல்படுவதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச் சாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில், தங்களுடைய நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட மாரிதாஸிடம் 1.5 கோடி ரூபாய்நஷ்ட ஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம்சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது.
மேலும், செய்தியாளர் கள் குறித்த தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூஸ்18நிறுவனம் தனக்கு மின்னஞ் சல் அனுப்பியதாகக் கூறிபோலி மின்னஞ்சல் செய்தியை வெளியிட்டும் மாரிதாஸ்மோசடி செய்தது குறித்து சென்னை சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த முறை நடைபெற்ற நீதிமன்றவிசாரணையின் போது, தன் னுடைய யூ- டியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்பியது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடகச் சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால்நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய்வழங்க மாரிதாசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்தார்.இந்நிலையில் இந்த வழக்கு மார்ச் 6 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாரிதாஸிடமிருந்து மன்னிப்புக் கேட்டு சமரசம் செய்வதற்கான நிபந்தனைகளைப் பெற்றுள்ளதாக நியூஸ் 18 நிறுவனம் நீதிமன் றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நியூஸ் 18தமிழ்நாடு தொலைக்காட்சியின் முன்னாள் முதன்மை ஆசிரியர் குணசேகரன் சமரசத்திற்கு தயாராக இருக்கிறாரா என்று நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது.
இந்நிலையில் குணசேகரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “என் தரப்பிலிருந்து எந்தசமரசமும் இல்லை. தீங்கிழைக்கும் அவதூறு நோக்கம்கொண்ட செயல்களுக்கு நான் பலியானேன். எனவேஅவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றிதொடரும். உங்கள் பேரன்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாரிதாஸ் மீது விரைவில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப் படுகிறது.