tamilnadu

கல்லணையில் இறால் பண்ணை: சிபிஎம் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர், ஆக.16- தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இறால் பண்ணை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அனுமதி வழங்க க்கூடாது என தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆக.20 அன்று ஆர்ப்பா ட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியக்குழு கூட்டம் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ. ஜீவகுமார், ஒன்றியச் செயலாளர் கே.காந்தி,  சம்சுதீன், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கல்லணை அருகே,  வளர்ப்பு இறால் பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள், சமூக  ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு வதால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தும் வகையில் உள்ள, இறால் பண்ணை யை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. கல்லணை முகத் துவாரத்தில் நடைபெறும் இப்பணி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. என வே, இதுகுறித்து பொதுமக்கள் கருத்து க்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.  கல்லணை - கொள்ளிடம் புதிய பாலத்தின் வேலையை துரிதமாக முடிக்க வேண்டும். கல்லணை பாலத்தில் ஏராளமான விபத்து கள் நடப்பதால், பாலத்தின் சுவரில் தடுப்புக்  கம்பியை உடனடியாக அமைக்க வேண்டும்”  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 20 (வியாழக்கிழமை) கல்லணையில் ஆர்ப்பா ட்டம் நடத்துவது” என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.