tamilnadu

img

தஞ்சை தெருக்களில் ஓடும் கழிவுநீர், எரியாத தெருவிளக்குகள்

 தஞ்சாவூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தஞ்சை மாநகராட்சி ஆணைய‌ர் பு.ஜானகி ரவீந்திரனை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது,  “தஞ்சாவூர் மாநகராட்சி 1 ஆவது வார்டு சத்தியகிருஷ்ணா நகர், பூங்கா அருகிலுள்ள, பாதாளச் சாக்கடை தொட்டியிலிருந்து, கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. அதே போல் ராஜராஜசோழன் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி நீண்ட நாட்களாக நிரம்பி சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.  மேலும் ராஜராஜ சோழன் நகர் பகுதியிலுள்ள, அனைத்து தெருக்களிலும், தெருவிளக்குகள் கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் ஒளிராமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஒளிராத தெரு விளக்குகளை ஒளிர வைக்கவும், தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்தி சுகாதாரம் பேணவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

;