tamilnadu

இலவச மின்சாரம் ரத்துக்கு எதிர்ப்பு மே 27-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 24- விவசாயத்திற்கு வழங்கி வந்த இல வச மின்சாரத்தை ரத்து செய்யும் மின் சார திருத்தச் சட்டம் ரத்து செய்ய வலி யுறுத்தியும், விவசாயிகள் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்கள் உள்ளிட்ட அனை த்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மே 27 நாடு தழுவிய ஆர்ப் பாட்டம், தனிமனித இடைவெளியை பின்பற்றி நடைபெற உள்ளது. தஞ்சா வூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றி யங்களிலும் நடைபெற உள்ள ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவ சாயிகள் கலந்து கொள்கின்றனர்.  

இதுகுறித்து, விவசாயிகள் சங்க போராட்டக்குழு சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்த ரம், மாவட்டத் தலைவர் வீரமோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்ட றிக்கையில் கூறியிருப்பதாவது, “விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களை யும் தள்ளுபடி செய்ய வேண்டும், நிபந்தனை இன்றி புதிய கடன் வழங் கிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாய விளைபொரு ட்களுக்கு இழப்பீடு வழங்க வேண் டும்.  விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா நிவா ரணப் பணிக்கு தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய, சிறு குறு விவசாயிகளுக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும்.  பிரதம மந்திரி விவசாயிகள் உத வித் திட்டத்தில் ரூ 6 ஆயிரம் வழங்கு வதை, ஆண்டுக்கு ரூ18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி யாக ரூ 7,500 வழங்குவதுடன், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்.  புலம்பெயர் தொழிலாளர் நிலை பாதுகாக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பாசனத்திற்காக அனைத்து ஆறு, ஏரி, குளம், வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். தமிழக அரசு விவசாயி களுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து விவ சாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சை உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் மே 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், அனைத்து தரப்பினர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

;