tamilnadu

img

சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் முக்கிய பகுதி யாகும். இங்குள்ள மீன்பிடி துறை முகத்தில் இருந்து, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படு கின்றன.  மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல் லும் சாலையில் சேதுபாவாசத்திரம் உள் ளது. மேலும் இந்த வழியாக நாகூர், வேளா ங்கண்ணி, முத்துப்பேட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் இருப்பதால் ஏராள மான வாகனங்கள் தினசரி சென்று வரு கின்றன. இந்நிலையில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் பேராவூரணி- பட்டுக் கோட்டை - கிழக்கு கடற்கரை செல்லும் மூன்று ரோடு சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி, காயம் அடைவது தொடர் கதையாக உள்ளது.  இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், “இந்த மூன்று சந்திப்பு கள் உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த இணை ப்பு சாலையில் 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.