தஞ்சாவூர் நவ.7- தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் கைகாட்டி கடைவீதி, ஆவணம் அகமுடையார் தெரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் கே.குட்டியப்பன் தலைமை வகித்தார். செயலாளர்கள் ஆர்.குமார், பொறியாளர் என்.சரவணன், பொருளாளர் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவணம் அகமுடையார் தெரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சிவகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் ஏ.சி.சி.ராஜா, நிர்வாகிகள் ஆசிரியர் எஸ்.கணேசன், வி. சுப்பையன், சிவா, ஆசிரியர் பழனிக் குமார், எம்.எஸ்.கே.சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.வி.முத்துராமன், பொருளாளர் ஆர்.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.