tamilnadu

img

பெரியார் மணியம்மை நிகர்நிலை  பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

 தஞ்சாவூர், செப்.11-  கல்விப் பணியில் 31 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தி யாவின் தலைசிறந்த முதன்மைப் பல்கலைக்கழகமாக விருது பெற்றுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 27-ஆம் பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி டி.ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்ட மளிப்பு விழாச் சிறப்புரை நிகழ்த்தினார்.  இந்தப் பட்டமளிப்பு விழாவில் பொறியியல் தொழில்நுட் பம், கட்டட எழிற்கலை, கலை, அறிவியல் மற்றும் மேலா ண்மைப் புலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 528 மாணவர்களுக்கும், 340 மாணவியர்களுக்கும் என மொத்தம் 868 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இதில் 16 மாண வர்கள் முனைவர் பட்டமும், 36 மாணவர்கள் ஆய்வியல் அறி ஞர் பட்டமும் பெற்றனர்.  மேலும் இவ்வாண்டில் தரவரிசையில் தகுதி பெற்ற வர்களின் எண்ணிக்கை 55 ஆகும். மேற்கொண்டு 19 தங்கப் பதக்கமும் 18 வெள்ளிப் பதக்கமும் 16 வெண்கலப் பதக்கமும் விழா மேடையில் அணிவித்து பாராட்டி சிறப்பு செய்யப் பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி வரவேற்றார்.