tamilnadu

‘மடமையை புரட்டிப் போட்ட புயல் பெரியார்’ திருச்சி சிவா புகழாரம்

தஞ்சாவூர், டிச.26- தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா பேசுகையில், பெரி யார் அரசியலில் எந்த பதவியிலும் இல்லை. ஆனால் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார். இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்குப் பெரியாரே காரணம், பெரியாரை மடமையை புரட்டிப் போட்ட புயல் எனலாம். பெரியார் மறைவு என்பது வரலாற்றுக் குறிப்பு மட்டுமே, பெரியார் மறையவில்லை. அவரது அழுத்தமான தாக்கம் சமுதாயத்தில் பதிந்துள்ளது. சமூக வலைதளங்களில் பெரியாருக்கு ஆதரவு பெருகி வருவதை உணரமுடிகிறது. தமிழகத்துக்கு, சமுதாயத்திற்கு வரும் கேடுகளைத் தடுக்கும் மின்சார வேலி பெரியார். தமிழகத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருக பெரியாரே அடிப்படை. பெண் உரி மைக்கு முதல் குரல் கொடுத்தவரும் பெரியாரே. என்ன ஜாதி என்று கேட்கும் பழக்கத்தை ஒழித்தவர்  பெரியார். தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் நீதிபதியாக வருவதற்குப் பெரியாரே காரணம்” என்றார்.  விழாவுக்குத் பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுசாமி தலைமை வகித்தார், இணை துணைவேந்தர் எஸ்.தேவதாஸ், கல்வியியல் புல முதன் மையர் ஸ்ரீவித்யா, பேராசிரியர்கள் ந.சீனிவாசன் த.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;