தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் அருகே மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் திருவிடைமருதூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, நாகேந்திரன் மற்றும் சிபிஐ உள்ளிட்ட கட்சியினர் கண்டன உரையாற்றினர்.