tamilnadu

ஊழல், முறைகேட்டில் ஈடுபடுவதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மிரட்டல்: தொடரும் ஆளுங்கட்சியினரின் அராஜகம்

கும்பகோணம், ஜூன் 2-  சிஐடியு தஞ்சாவூர் மாவட்டச் செய லாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதா வது, 1.6.2020 அன்று அமைதியான முறையில் நிவாரணம் கேட்டு போரா டிய நெசவாளர்களை அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் தியாகராஜன் மற்றும் சிலர் மிரட்டி கொச்சையான வார்த்தைகளை திட்டி தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நெசவாளர் கள் திருவிடைமருதூர் காவல் நிலை யத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர்.  அதிமுகவைச் சேர்ந்த சிங் செல்வ ராஜ் சோழன் பட்டு கூட்டுறவு சொசைட்டி தலைவராகவும் தியாகரா ஜன் என்பவர் திருபுவனம் பட்டு கூட்டு றவு சொசைட்டி தலைவராக ஜனநா யக முறையில் தேர்தல் நடத்தாமல் அதி கார துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோ தமாக தங்களை தலைவராக அறிவித்துக் கொண்டனர்.  

இவர்கள் பொறுப்பிற்கு வந்த காலத்திலிருந்து நெசவாளர்கள் கூட்டுறவு சொசைட்டியின் தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரு வதை கண்டித்தும் எதிர்த்தும் சிஐடியு, ஏஐடியுசி தாமாக தொழிற்சங்கங்கள் நெசவாளர்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. இதனால் ஆத்திர மடைந்த மேற்கண்ட நபர்கள் தொழிற் சங்க தலைவர்களை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் போன்ற நடவடிக்கை களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதன் வெளிப்பாடாக ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் போராடியவர்கள் மிரட்டி தாக்கியுள்ள னர். இந்த அராஜக நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது ஆளுங்கட்சியினர் அதிகாரத்தில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;