tamilnadu

நாட்டில் முதல் முறையாக கும்பகோணத்தில் இரவு நேர ஆதார் சேவை மையம் துவக்கம்

கும்பகோணம், மார்ச் 17-  இந்தியாவில் முதல் முறை யாக கும்பகோணத்தில் இரவு நேர ஆதார் சேவை மையம் துவக்கப் பட்டது.  தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் ரயில் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். தபால் பிரிப்பகத்தில் இரவு நேர ஆதார் சேவை மையம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மண்டல இயக்குனர் தாமஸ் லூர்து ராஜ் தலைமை வகித்தார். ஆர்எம்எஸ் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆதார் சேவை மையத்தை திருச்சி மண்டல தபால் துறை தலை வர் சுமதி ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில்,  திருச்சி மத்திய மண்டலத்தில் 386 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் அனை த்திலும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தி யாவிலேயே முதல் முறையாக கும்பகோணத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் எனப்படும் ரயில்வே தபால் பிரிப்பகத்தில் இரவு நேர ஆதார் சேவை மையம் துவக்கப் பட்டுள்ளது. இந்த இரவு நேர ஆதார் சேவை மையம் அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படும். இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு செய்ய விரும்பும் மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய அளவில் தபால் சேவை யை பொறுத்தவரை திருச்சி மத்திய மண்டலம் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறப்பாக செயல் படும் தபால் நிலையங்களில் முதல் பரிசுகளை திருச்சி மத்திய மண்ட லம் பெற்றுள்ளது என்றார்.  நிகழ்ச்சியில் கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அஜதசத்ரு மத்திய மண்டல உதவி இயக்குனர் மைக்கேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;