tamilnadu

img

கும்பகோணம் பாலியல் வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு சிபிஎம் பாராட்டு

கும்பகோணம், ஜன.20- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதி வரை போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல்துறை அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம் பெண் ஒருவர், நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.  இதன் தொடர்ச்சியாக பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேருக்கும், சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து தஞ்சா வூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணை யில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளதால், இதில் பங்கெடுத்த போலீஸாரை அனைத்து தரப்பு மக்களும் மனதாரப் பாராட்டினர். பாலியல் வழக்கானது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியின் தில்லி கிளையில் வேலை கிடைத்தது. இது தொடர் பான பயிற்சிக்காக கும்பகோணம் வந்த அந்த  இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக அந்தப் பெண் கும்பகோணம் போலீ ஸில் புகார் அளித்தார். குற்றச் சம்பவத்தின் வீரியத்தை அறிந்த போலீஸார் உடனடியாக விசாரணை முடுக்கி விடப்பட்டது. 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இரவு 10  மணிக்கு அந்த இளம்பெண் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவர் ஆட்டோ வில் ஏறி, தான் செல்ல வேண்டிய இடத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டிரைவரிடம் கூறியிருக்கி றார். ஆனால், அந்த டிரைவர் இளம்பெண் சொன்ன இடத்துக்குச் செல்லாமல் மாற்று வழியில் சென்றதால் சந்தேகமடைந்த அவர், `ஹெல்ப் ஹெல்ப்’ எனக் கத்திக் கொண்டு ஆட்டோவில் இருந்து குதித்து விட்டார். அப்போது அந்தப் பெண்ணிடம், `நாங்கள் போலீஸ்’ எனக் கூறிக் கொண்டு உதவுவதாக குற்ற வாளிகளான தினேஷ், வசந்தகுமார் கூறியுள்ள னர். அத்துடன், `நாங்கள் கொண்டு போய் விடுகி றோம்’ எனக் கூறி அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்து கொண்டு இருட்டான பகுதிக்கு அவ ரைக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், அவர்க ளின் நண்பர்களான புருஷோத்தமன், அன்பரசு ஆகிய இருவரையும் வரவழைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த நான்கு பேரால் அந்தப் பெண் ணுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. அதன் பின்னர், இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகக் கூறி தாக்கியுள்ளனர். இதன் பின்னர், மற்றொரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை ஏற்றி விட்டு, பின்னாலேயே சென்றுள்ளனர். இதற்கிடையில் அந்தப் பெண் ணின் ஏடிஎம் கார்டை மிரட்டி வாங்கி பணம் எடுக்க வும் முயன்றுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை. பின்னர், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து மறுநாள் காலை காவல் நிலையத்துக்கு வந்து அந்தப் பெண் புகார் கொடுத்தார். அப்போது, `தனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. நிச்சயம் அவர்களுக் குத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்’ எனக் கூறி கதறியழுதார்.  இதையடுத்து, உடனடியாக கும்பகோணம் காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர். இதில் நான்கு பேர் மற்றும் இதற்கு முதல் கார ணமான ஆட்டோ டிரைவர் என 5 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விசாரணை முடிந்து தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மக்கள் மற்றும் காவல்துறை எதிர்பார்த்தது போலவே குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைத்து விட்டது. இவ் வழக்கு தொடர்பாக 33 சாட்சிகளிடம் விசாரணை செய்ததுடன் 68 தடயங்களுடன் சுமார் 700 பக்கத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் எதிர்பார்த்தபடி தண்ட னையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாலியல் செயலில் ஈடுபடும் போது அதை வீடியோ எடுத்து மிரட்டினால் அந்தப் பெண் பயந்து கொண்டு வெளியே சொல்ல மாட்டாள் என்ற எண்ணம் இதில் ஈடுபடும் நபர்களுக்கு உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரிய மாக வெளியே வந்து புகார் கொடுத்து சாட்சியும் சொல்லியிருக்கிறார். அவர் குறித்த எந்தத் தகவ லும் இதுவரை வெளியில் தெரியாத வகையி லும் மீடியாவில் வெளியிடப்படவில்லை. அந்தப் பெண் தான் இந்த வழக்கின் வெற்றிக்கு முதல் காரணம். இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடி யாது என்பதற்கு இந்த வழக்கே சாட்சி.  இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்ட னை கிடைப்பதில் முக்கியப் பங்காற்றியவர், கும்ப கோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆவார். இவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

;