districts

மதவெறி சக்திகள் மீது நடவடிக்கை: முதலமைச்சருக்கு சிபிஎம் பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஆக 08 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அதி காரிகள் துணையோடு கிருத்துவ வழிபாட்டு தளததை இடித்து மதக்கலவரங்களை தூண்ட முயற்சி செய்த மதவெறி சக்தி களை தனிமைப்படுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கட்சியின் மாவட்ட செயலாளர் பாராட்டி யுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஓரிரு  ஆண்டுகளாக பாஜக,  இந்துமுன்னணி  அமைப்பினர் மத மோதலை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோவிலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தனர்.

பகண்டை கூட்டுரோட்டில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பதட்டத்தை உருவாக்கி சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர். இத்துடன் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியின் பெயர்ப்பலகையை தார்பூசி அழித்தனர்.  உளுந்தூர்ப்பேட்டை பகுதியில் பசுபாதுகாப்பு என்றபெயரில் பண்டிகைக் காலங்களில் முஸ்லீம் மக்களி டம் தொடர்ந்து தகராறு செய்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதன் தொடர்சியாகவே சங்கராபுரம் வட்டம், பொருவளூர் கிராமத்தில் புல எண்  112ல்  ஒரு சிறு குன்றின்மீது உள்ள ஏசு சிலை யையும் ,  2 கெபிகளையும் (குகை)  அப்புறப்ப டுத்திட வேண்டும்என வலியுறுத்தி வந்தனர். மேற்கண்ட மதவெறி சக்திகளுக்கு ஊக்க மளிக்கும் வகையிலும்,  தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட அரசு நிர்வாகம் கடந்த 2.8.2021ல் இந்த கிருத்துவ வழிபாட்டு தலங்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். இதுகுறித்து முன்கூட்டியே சிபிஎம்  சார்பில் கடந்த 28.7.2021லேயே இத்தேவால யத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும், இதனால் இப்பகுதியில் பதட்டமும், பெரும் அமைதியின்மையும் ஏற்படும் என்றும் அரசு நிர்வாகத்தை கேட்டுக் கொண்ட பின்பும்  2.8.2021ல் இடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி னர்.

இதைதொடர்ந்து 3.8.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையை சீர்கு லைத்து வரும் மதவெறி சக்திகளுக்கு ஆதர வாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது  கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிறு பான்மை மக்களின் உரிமைகள் பாது காக்கப்பட வேண்டும். பொருவளூர் மலை யில் அரசே முன்னின்று கிருத்துவ வழி பாட்டு தலங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்  என வலியுறுத்தி எங்கள் கட்சியின்  மாவட்டக்குழு சார்பில்  இமெயில், வாட்ஸ்அப் மூலம் விரிவான மனு ஒன்றை அனுப்பப்பட்டது. உடனடியாக அடுத்த சிலமணி நேரங்க ளிலேயே தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவு அலுவலகத்தில் இருந்து உங்கள்  மனு கிடைத்துள்ளது, உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்  என தகவல் தெரிவித்தனர்.  மறுநாள் 4.8.2021 அன்று ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்.க.கார்த்திகேயன், கள்ளகுறிச்சி வருவாய் கோட்டாட்சியர், திருக்  கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இக்கிராமத்திற்கு நேரில் சென்று கிருத்துவ பெரியோர்களை சந்தித்து நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

மீண்டும் இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்த வும், இடிக்கப்பட்ட இடத்தில் ஏசுசிலை , கெபி (குகை) முதலானவற்றை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். மாவட்டத்தில் மதக்கலவரங்களை உரு வாக்கி மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் மதவெறி அமைப்பு களுக்கு ஆதரவளிக்கும் அரசு அதிகாரிகளின் தவறுகளை  அறிந்து இத்தனை விரைவில்  சரி செய்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்ச ருக்கும், முதலமைச்சரின் தனிபிரிவு அலுவ லர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எங்கள்  கட்சியின் சார்பில் நன்றியையும் , பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் தவறிழைத்த அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுப்பதும், பொருவளூர் மலையில் கிருத்துவ மக்களின் வழிபாடு  தொடர்ந்து நடைபெறுவதை உத்திரவாதப்  படுத்துவதும், மாவட்டத்தில் மதவெறிசக்தி கள் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை தடுப்பதும், இதற்கு தொடர் கண்காணிப்பும், உறுதியான நடவடிக்கையும் தேவை என்பதை தமிழக அர சின் கவனத்திற்கு தெரிவித்துக்  கொள்கி றோம் என அறிக்கையில் சிபிஎம் கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை கூறி யுள்ளார்.