தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி, பூக்கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் துவக்கி வைத்தார். போட்டியில், திருச்சி உள்பட பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 775 காளைகளும், 389 காளைபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் 9 வீரர்கள், 5 மாட்டு உரிமையாளர்கள் மற்றும் 5 பார்வையாளர்கள் என 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.