tamilnadu

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 2- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்ப டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரி வித்துள்ளார்.  தஞ்சையில் அனைத்து மதத் தலைவர்களுடனான ஆலோ சனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகை யில், “தமிழக அரசின் ஆணைப்படி கொரோனோ வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ்  ஏற்கனவே உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன், ஊரடங்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  திருமண நிகழ்ச்சிகள், இறுதி நிகழ்ச்சிகளில் 50 நபர்க ளுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது. மாவட்டத்தில் பொதுப்  போக்குவரத்து ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தப்படு கிறது.

தஞ்சை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல  அனுமதிக்கப்படும். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்க ளுக்கு சென்றுவர இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.  தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி, மளிகைக்  கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை  அனுமதிக்கப்படுகிறது. தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளின் எல்லைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனு மதி இல்லை. தஞ்சை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் (5,12,19,26 தேதிகள்) அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  அரசு ஊரடங்கை அமல்ப டுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்த நோய்  பரவலை தடுக்க இயலாது. எனவே பொதுமக்கள் வெளியில்  செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிய  வேண்டும்” என்றார்.

;