tamilnadu

img

இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிடக் கோரிக்கை

கும்பகோணம், அக்.28- கும்பகோணம் இன்சூர ன்ஸ் ஊழியர்கள் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலர் உறுப்பி னர் தமிழக அமைச்சர் ஜெயக் குமாருக்கு  கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  அம்மனுவில் குறிப்பிட்ட தாவது, ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சாதாரண மக்களுக்கான இன்சூரன்ஸ் பரவலையும் சமூக பாது காப்பையும் பாதிக்கும் உல கத்தின் பல நாடுகளில் வளர்ந்த நாடுகள் உள்ளிட்டு இத்தகைய வரிவிதிப்பு ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமி யத்திற்கு இல்லை. ஆயுள் இன்சூரன்ஸ் தனி நபருக்கு சமூக பாதுகாப்பை வழங்கிட வேண்டும். இந்தியா போன்ற வளர்முக நாட்டில் பொருளாதாரத்திற் கும் ஆதார தொழில் வளர்ச்சி க்கும் பெரும் பங்களிப்பிற் கும் தேச நிர்வாகத்திற்கான பங்களிப்பின் மீது வரி விதிக் கப்படுவது சரி அல்ல.இது நிதி திரட்டவும் பாதிக்கும். 2014 இல் 12 சதவீதமாக இருந்த சேவை வரி தற்போது 5 ஆண்டுகளில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் சுமை யாக இருந்து வருகிறது ஏற்க னவே சேவை வரம்பிற்குள் வராத சேவைகள் அவர்கள் மீதும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டி ருப்பது புதிய சுமைகள் ஆகும். ஆகவே எல்ஐசி இந்திய பொருளாதாரத்தி ற்கு அளித்து வருகின்ற பங்களிப்பை ஊக்கப்படுத் தும் வகையில் சிறப்பு மையத்திற்கு ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கி வரு மான வரி சலுகை அளிக்கப் பட வேண்டும் என்று நேர் மறை கோரிக்கை இருக்கிற சூழலில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கு வோம். ஆகவே சமூக பாது காப்பு தேச நிர்மானம் பாலி சிதாரர் நலன் எவ்வகையிலும் சாத்தியமில்லை. ஆகவே ஜிஎஸ்டி விதிப்பு கைவிடப் பட வேண்டும் என்று கோரிக் கை சரியானது இதை பரி சீலிக்க வேண்டும் உடன் ஜிஎஸ்டி கவுன்சில் இப் பிரச்சனை குறித்து எடுத்து ரைத்து வரி விதிப்பை கைவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது. கும்பகோணம் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன், கும்பகோ ணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் மனுவில் கையெழுத்திட்டு ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பி னர் தமிழ்நாடு அமைச்சர் ஜெயக்குமாருக்கு கோரிக் கை மனு அனுப்பி வைத்த னர். தலைவர்களின் சந்திப்பின் போது எல்ஐசி ஊழியர் சங்க துணைச் செய லாளர் சுப்ரமணியன், கோட்ட இணை செயலாளர் சேகர்  கிளை செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட எல்ஐசி ஊழியர் கள் உடனிருந்தனர்.