tamilnadu

வேட்பு மனுவை கண்டுபிடித்து தரக் கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

தஞ்சாவூர் டிச.28- உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுவை கண்டுபிடித்து தரக்கோரி தஞ்சாவூரில் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரை காவ‌ல்துறை‌யி ன‌ர் கைது செய்தனர். தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடி எம்ஜிஆர் நகரில், உள்ள ஒரு மாடி வீட்டின் மேல் பகுதியில் தனியார் நிறுவ னத்துக்கு சொந்தமான 100 அடி உயர செல்போன் டவர் உள்ளது. சனிக்கிழமை  காலை இளைஞர் ஒருவர் டவர் மீது ஏறி உச்சிக்கு சென்று, கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழ் பல்கலைக் கழக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர், இளைஞரை கீழே இறங்குமாறு கூறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து கீழே இறங்கிய இளைஞரை காவல்துறையி னர் கைது செய்து அழைத்துச் சென்ற னர். அப்போது செய்தியாளர்களிடம் அந்த இளைஞர்  கூறியதாவது: தஞ்சா வூர் மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றி யத்தில் காடந்தங்குடி மதுரபாஷாணி யபுரம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஆனந்தன் (43) என்பது என்னுடைய பெயர். நான், மதுக்கூர் ஒன்றியத்தில் 10-ஆவது வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, போட்டி யிட வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். என்னுடைய வேட்புமனு ஏற்கப் பட்டது, ஆனால் வேட்புமனு பரிசீலனை செய்து, சின்னம் ஒதுக்கீடு செய்யும் நாளன்று நான் ஊரில் இல்லை. ஆனால் அதற்கு முன்பே எனக்கு விரும்பிய சின்னத்தின் பட்டியலை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கி யிருந்தேன். ஆனால் என்னுடைய வேட்பு மனு ஏற்கப்படாமல், நிராக ரிக்கப்பட்டுள்ளது.  அதிகாரிகளிடம் நேரில் சென்று நிராகரிப்புக்கான காரணம் கேட்டும் கூறவில்லை, என்னு டைய வேட்புமனுவை காணவில்லை என கூறுகின்றனர். என்னுடைய வேட்புமனுவை கண்டு பிடித்து தர வேண்டும் என கடந்த 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் முறையிட்டும் இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை.  எனவே, என்னுடைய வேட்புமனு கண்டுபிடித்து தர வேண்டும், வேட்புமனுவை நிரா கரிக்கப்பட்டதற்கான காரணத்தை கூற வேண்டும் என வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறினேன்” என்றார்.

;